உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு?

0
394

திருகோணமலை-கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு உப்பளத்தில் உப்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கமைய குறித்த உப்புச் செய்கையில்
ஈடுபட்டு வரும் நபர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக உப்பு செய்கையாளராகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 160 ஏக்கர் நிலப்பரப்பபில் இது செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் 315 நபர்கள் சொந்தமாக செய்கையில் ஈடுபடுகிறார்கள்.

நிர்ணய விலை கிடைக்கப் பெறாமை, எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக நீர் இரைக்கும் இயந்திரத்திற்கு அதிக செலவு மற்றும் உப்பு மூடைகளை அடுக்கி வைப்பதறாகான நிலையான கட்டிட வசதியோ சிறந்த உப்புகளை கொள்வனவு செய்வதற்கான தொழிற்சாலை உட்பட போதிய தொழில் நுட்ப அறிவின்மை என பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சுமார் 20 வருட காலமாக பொருளாதார பங்களிப்பில் உப்பு செய்கை தாக்கம் செலுத்தி வருகிறது ஆனாலும் இவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாமை குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு உப்பு மூடையின் விலை (50கிலோ கிராம்) ஆரம்பத்தில் 1000 ரூபாவாக கொள்வனவில் ஈடுபட்ட போதிலும் தற்போது சந்தைப்படுத்தலில் அது 500 ரூபாவுக்குள் குறைவடைந்துள்ளது.

பொருளாதார ரீதியாக தங்களது வாழ்வாதாரத்தை உப்பு விளைச்சல் மூலமே இவர்கள் பெற்று வருகிறார்கள் ஆனாலும் அண்மைய கன மழை காரணமாக தொழில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடத்தில் கோடை அதிக வெப்ப நிலையை கருத்திற்கொண்டு கால நிலைக்கு ஏற்ப மார்ச் தொடக்கம் ஒக்டோபர் நவம்பர் வரை உப்பு செய்கை உற்பத்தி ஈடுபாடு செய்யப்படுகிறது தரமான உப்பு போன்றன நிலை காணப்பட்டாலும் பல சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டியும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆகவே உப்பு செய்கை உற்பத்தி பிரச்சினைகளுக்கு நிரந்ததர தீர்வு கிடைக்குமானால் எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலவாணி மற்றும் பொருளாதார பங்களிப்பில் பாரிய பங்களிப்பு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.