இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் தடுப்பூசி போடப்படாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாக தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வருகை தரும் எந்த நோயாளர்களும் அசவுகரியத்திற்கு உள்ளாக இடமளிக்கக் கூடாது என வைத்தியசாலையின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.