மின்சாரம் தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
348

திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கமைய திருகோணமலை அனுராதபுரம் சந்தி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவரேகுறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்பு வெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது