வீடு ஒன்றுக்குள் சிறுவன், இளம் பெண் உட்பட மூன்று சடலங்கள் மீட்பு – பொலிஸார் வெளியிட்ட அதிர்சித் தகவல்.

0
396

குருணாகல், கல்கமுவ பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில், 28 வயதுடைய ஆண், 28 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவனின் உடல்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 இந்த சடலங்கள் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கமைய நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.