வெளிநாட்டு பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையத்தில் கொடூரமான தாக்குதல்.

0
388

இலங்கையில் விசா இன்றி சிக்கிய வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் நிலையத்தில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மிரிஹான பிரதேசத்தில் இருக்கும் இந்த நிலையத்தில் இந்திய பெண் ஒருவரை மெடகஸ்கார் நாட்டு பெண் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாக்கப்பட்ட இந்திய பெண் 26 வயதுடையவர் எனவும் தாக்குதல் மேற்கொண்ட மெடகஸ்கார் நாட்டு பெண் 29 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மெடகஸ்கார் நாட்டு பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

எனினும் இந்த தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.