இலங்கை வைத்தியசாலை பிண அறைகளில் குவிந்து கிடக்கும் கொவிட் சடலங்கள் – துர்நாற்றம் வீசுவதாக தகவல்.

0
375

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததனை தொடர்ந்து பாணந்துறை வைத்தியசாலையின் பிண அறையில் 45 சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் கொவிட் சடலங்கள் 22 வரை உள்ளதாகவும் அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிண அறையின் குளிரூட்டிகளில் திறனுக்கேற்ப சடலங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவற்றை வைப்பதற்கு பிண அறையில் இடமில்லாமையினால் அதற்கு வெளியே வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்கப்பட்டுள்ள சடலங்களில் பெரும்பான்மையான சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக பிரதேசத்தின் சுடுகாடுகளை 24 மணித்தியாலங்கள் முழுவதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சடலங்களை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார்.