ஆடிப்பூர நாளான இன்று கோவில்களுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
370

அரசின் உத்தரவுக்கமைய ஆடிப்பூர நாளான இன்று கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருப்பரம்குன்றம் முருகன் கோவிலுக்கு இன்று காலை ஏராளமான பக்தர்கள் சென்றிருந்தானர்.

ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூரம் திருவிழா, ஆடி மாதத்தில் ஆடி மாத திருவிழா என்பன கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.

தற்போது நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தால் இந்த இரு விழாக்களும் உள் திருவிழா நடைபெற்றது.

அத்துடன் ஆடிப்பூர நாளான இன்று கோவில்களில் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டிருந்தது.

இருப்பினும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காலையில் சென்று இருந்தனர்.

மேலும் அவர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாமல் பூட்டப்பட்டிருந்த வாசல் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டு சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.