நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் , கட்சியின் பின்வரிசை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த சந்திப்பு இன்று முற்பகல் 10 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இந்த சந்திப்பின் போது தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 நிலை தொடர்பிலும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.