ஆசிரியர் சங்க போராட்டத்தை அச்சுறுத்தலால் நிறுத்த முடியாது – ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்.

0
749

அண்மைக்காலமாக நாட்டில் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டமை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அச்சுறுத்தல்களால் மலினப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது செய்வதையோ நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் யாழில் நேற்று (10) நடாத்திய ஊடக சந்திப்பின் போது சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது, இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த வாகனப் பேரணி போராட்டத்தை குழப்புவதற்கு பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை திசை திருப்பி குழப்புகின்ற பொலிஸாரின் நடவடிக்கைகளை முழுமையாக எதிர்க்கின்றோம். போராட்டத்திற்கு உதவிய வாகனத்தின் சாரதியையும் ஒளிபரப்பு சேவை வழங்கியவர்களையும் கைது செய்வதையோ விசாரணை செய்வதையோ பொலிஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம் என்றார்.