யாழில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்!

0
825

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய கொடிகாமம் தொடருந்து நிலையத்தின் அண்மித்த பகுதியில் குறித்த பெண் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது அதே திசையில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் பின் பக்கத்தால் வந்து மோதியுள்ளது.

அத்துடன் மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய அன்னலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த விபத்துக்குள்ளான பெண் சாவகச்சேரி தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை மோசமானதை அடுத்து அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இந்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.