நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரிப்பதால் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பொதுப் போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய தனியார்துறை பேருந்துகள், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும்.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் 40 வீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகவே கடமைகளுக்காக செல்பவர்கள் அத்துடன் அத்தியாவசியத் தேவைகளுக்காக செல்பவர்கள் மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.